Featured Category

எகிப்தில் தொடரும் பெண்கள் சித்திரவதை!

3 ஜூலை, 2013 ஆண்டு முதல் எகிப்தில் பெண்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான மீறல்களை ஒரு சர்வதேச உரிமை தளம் ஆவணப்படுத்தியுள்ளது, இது முந்தைய அரசாங்கத்தால்,பெண்களின் மீது நடந்து கொள்ளும் முறையில், இது ஒரு சிவப்புக் கோடாக கருதப்பட்டது.

ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் ஆறு ஆண்டுகளில், காணாமல் போனவர்கள், உடல் மற்றும் உளவியல் சித்திரவதை, கற்பழிப்பு அச்சுறுத்தல்கள், தேசிய பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை பதிவு வீ ரெகார்ட் சர்வதேச உரிமை தளம் செய்த்துள்ளனர்

ஆராய்ச்சியின் கூற்று படி, இவர்களின் ஆட்சி பெண்களுக்கு எதிராக
312 சட்டவிரோத கொலைகளை நடத்தியுள்ளது, 396 பெண்கள் மற்றும் 16 சிறுமிகளை வலுக்கட்டாயமாக மறைக்கப்பட்டுள்ளனர்.
115 பெண்களை பயங்கரவாத நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

3 ஜூலை 2013 முதல் 3,185 பொதுமக்கள் எகிப்திய பாதுகாப்பு படையினரால் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான அரபு அமைப்பு தெரிவித்துள்ளது.

எகிப்திய அதிகாரிகள் தங்களுக்கு எதிரானவர்களின் குரலை ஒடுக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகக் கடுமையானவை என்று மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

6 ஆண்டுகளாக காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியுடன் ஹமாஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட நபரான கைரத் அல்-ஷேட்டரின் மனைவி மற்றும் மகள்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு எதிராகவும் எகிப்து ஆட்சியாளர்களால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது .

இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்ளாவி இவ்வாட்சிக்கு எதிராக வெளிப்படையாக பேசக் கூடியவராக இருந்தார். அதனால் பழிவாங்கும் படலமாக, அவரின் மகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் ஜூலை மாதம் அவர் தனிமைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். இதன்முலம் ஓலா அல்- கர்ளாவியின் வழக்கு குறிப்பிடத்தக்கக் கவனத்தைப் பெற்றது.

ஹோப் அலையன்ஸ் வழக்கின் ஒரு பகுதியாக பல பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் மவ்தா உஸாமா அல்-அக்பாவி, அவரின் தந்தை, எதிர்க்கட்சி அரசியல்வாதி உஸாமா அல்-அக்பாவியைக் கண்டுபிடிக்க முடியாததால் பாதுகாப்புப் படையினரால் காவலில் வைக்கப்பட்டார்.

அவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அல்லது பரோலில் இருந்தபோது, 2,629 பெண்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; 127 பெண்கள் இன்னும் சிறையில் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் விடுவிக்க உத்தரவிட்ட பின்னர் கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதன் மூலம் எகிப்திய “சுழலும் கதவு” நடைமுறையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் கண்டித்துள்ளது.

வி ரெக்கார்ட் படி, 2,761 பெண்கள் பல்வேறு தடுப்பு மையங்களில் சித்திரவதைச் செய்யப்பட்டு இழிவுபடுத்தப்பட்டுள்ளனர், இதில் ஹென்ட் முஹம்மத் தலாத் கலீல், 43, மின்சாரம் பாய்ந்து கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

பெண் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர் . பெண்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய தடை விதித்துள்ளனர்.

இந்த துஷ்பிரயோகம் “அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் மறைந்துவிடவோ அல்லது மறக்கவோ முடியாத உளவியல் மற்றும் உடல்ரீதியான அடையாளங்களைத் விட்டுச் சென்றுள்ளது ” என்று
வி ரெக்கார்ட் கூறுகிறது. இது எகிப்திய அதிகாரிகளுக்கு அனைத்து வகையான மனித உரிமை மீறல்களையும் நிறுத்துமாறு அழைப்பு விடுத்து, இந்த மீறல்கள் குறித்து வெளிப்படையான, விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றது.

source –
https://www.middleeastmonitor.com/20190802-we-record-2761-women-tortured-and-degraded-since-egypt-coup/?fbclid=IwAR0YLVgkURtnUJ2qyyaeh7E8wXBpybZitdgtVxQlGx89-A2srslqnMzLU58

  • அபூஷேக் முஹம்மத்

அபூஷேக் முஹம்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!